Ticker

6/recent/ticker-posts

எக்னெலிகொட கடத்தல்! கோட்டா, பொன்சேகாவிடம் விரைவில் விசாரணை!

லங்கா ஈ நியூஸ் இணையதளத்தின் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்திச்செல்லப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்ட சம்பவம் குறித்து சந்தேகத்தின்பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட 'தவேந்திரன்' (சுமதிபால சுரேஷ்குமார்) என்பவர் வழங்கிய தகவல்களுக்கமைய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரிடம் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது. 


இதற்கமைய விரைவில் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்புடைய மேஜர் ஜெனரல் கபில யஹந்தாவிதாரன, பிரிகேடியர் வன்னியாராச்சி, மேஜர் ஜெனரல் அமல் கருணாசுகர, மேஜர் ஜெனரால் ஜன்மீக லியனகே ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்படவுள்ளது என்று பொலிஸ் தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யார் இந்த தவேந்திரன்? 'தவேந்திரன்' எனப்படும் சுமதிபால சுரேஷ்குமாரின் தந்தை சிங்களவராவார். தாயார் தமிழ். கடற்படையினரின் தாக்குதல் ஒன்றில் அவரது தாய் கொல்லப்பட்டுள்ளார். இராணுவத்தினரின் தாக்குதலில் தந்தை கொல்லப்பட்டுள்ளார். இவர் 1985ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இணைந்துள்ளார். அப்போது அவருக்கு 16 வயதாகும். இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்திருந்தபோது, அந்த இராணுவத்தினரால் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி ஒன்றில் சிக்கி சுரேஷ்குமார் தனது காலை இழந்துள்ளார். 

இதன்பின்னர் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவில் இணைந்துள்ளார். இந்தப் பிரிவில் 'தவேந்திரன்' என்ற பெயரில் அவர் செயற்பட்டுள்ளார். போர்க் காலத்தில் விடுதலைப்புலிகளின் கிழக்குப் படையணிக்குத் தலைவராக இருந்த ராம் என்பவரின்கீழ், திருகோணமலை விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவிற்குப் பொறுப்பாக 'தவேந்திரன்' பணியாற்றியுள்ளார். 2005 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா அணி பிரிந்தபோது தவேந்திரனும் அந்த அணியில் இணைந்துகொண்டார். இதன் பின்னர் அவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றினார் எனக் கூறப்படுகின்றது. 

Post a Comment

0 Comments