Ticker

6/recent/ticker-posts

டலஸ் அழஹப்பெரும கணித பாடத்தில் சித்தியடையவில்லை என்பது புலனாகியுள்ளது – கபீர் ஹாசீம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் டலஸ் அழப்பெரும கணித பாடத்தில் சித்தியடையாமை அம்பலமாகியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
கடவத்தை முதல் கண்டி வரையிலான அதிவேக நெடுஞ்சாலை தொடர்பில் டலஸ் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த தகவல்களின் மூலம் டலஸின் கணிதத் திறன் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
இந்த உத்தேச பாதையின் நீளம் பற்றி டலஸிற்கு போதியள தெளிவில்லை.
பாதுகாக்கப்பட்ட சேற்று நிலங்களின் ஊடாகவே நிர்மானப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்கான செலவுகளை கருத்திற்கொள்ளாது டலஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஏதேனும் ஓர் நிர்மானப் பணியின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளின் அடிப்படையில் பொறியியலாளர்களினால் மதிப்பீடு செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
இந்தவிடயங்களை கருத்திற் கொள்ளாது டலஸ் கருத்து வெளியிட்டுள்ளதாக கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments