தோ்தல் பிரசார பணிகள் முடிவடையும் தருவாயில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர் பிரதியமைச்சர் அமீர் அலியின் ஆதரவாளர் ஒருவர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தோ்தல் கண்காணிப்பு கபே மற்றும் பெப்பரல் அமைப்புகள் கூறியுள்ளன.
அமீன் என அழைக்கப்படும் 32 வயது நபர் ஒருவரே இவ்வாறு வாழைச்சேனையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
அதேவேளை குறித்த படுகொலையை கேள்வியுற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீன் அதிர்ச்சியும் கவலையையும் அடைந்துள்ளதுடன் தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

0 Comments