தேர்தல் காலத்தில் கட்சிப் பொதுச் செயலாளர்கள் பணி நீக்கப்படுவது சட்டவிரோதமானது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் கட்சியொன்றின் பொதுச் செயலாளரை நீக்க சட்டத்தில் இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருணாகலில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடுதல் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர்கள் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் பின்னர் தேர்தல் ஆணையாளர்இ கட்சியின் பொதுச் செயலாளர்களுடன் மட்டுமே தொடர்பாடல்களை மேற்கொள்வார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் காலத்தில் உச்ச நீதிமன்றினால் மட்டுமே உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றைத் தவிர்ந்த ஏனைய நீதிமன்றங்களினால் தேர்தல் ஆணையாளருக்கு உத்தரவிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையாளரைப் பொறுத்தவரையில் பொதுச் செயலாளர்களாக ஏற்கனவே பதவி வகித்தவர்களே செயற்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுச் செயலாளர்களுக்கு அறிவிக்காமலேயே அவர்களை நீக்குவது மரபுகளுக்கு புறம்பானது என சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
tamil.srilankamirror.com

0 Comments