Ticker

6/recent/ticker-posts

மஹிந்தானந்தவின் மோசடி அம்பலம் !

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அரச காணியில் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாலவப்பிட்டியில், இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான அரச காணியொன்றை வருடம் 69000 ரூபா குத்தகை அடிப்படையில் மஹிந்தானந்தவின் அமைப்பு பெற்றுக் கொண்டுள்ளது.
இந்தக் காணியில் கட்டடம் ஒன்றை அமைத்து, அந்த கட்டடத்தை அரச நிறுவனமொன்றுக்கு வருடத்திற்கு 12 இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு முன்னாள் அமைச்சரினால் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தேசிய தொழில் பயிலுனர் அதிகார சபைக்கு இந்த அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் ஒரு லட்ச ரூபா மாத வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் உறுப்பினர்கள் அரசாங்க அல்லது அரசாங்கத்தின் துணை நிறுவனங்களுடன் நேரடி ஒப்பந்தங்களை செய்து கொள்வது சட்டவிரோதமானதாகும்.
குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட காணியில் நிர்மானிக்கப்பட்ட கட்டடத்தை மீளவும் அரசாங்க நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு விடுவதற்காக அட்டர்னி அதிகாரம் வழங்கிய வேறும் ஒர் நபரை முன்னாள் அமைச்சர் பயன்படுத்தியுள்ளார்.
எனினும், புகையிரத திணைக்களத்திற்கு வழங்கப்பட வேண்டிய வருடாந்த குத்தகைத் தொகை உரிய முறையில் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரச காணியை குத்தகைக்குப் பெற்று அதில் கட்டடம் அமைத்து அந்தக் கட்டடத்தை கூடுதல் தொகைக்கு குத்தகைக்கு விடுவது சட்டவிரோதமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
tamilwin.com

Post a Comment

0 Comments