Ticker

6/recent/ticker-posts

ஐ.தே.க.வும் ஐ.ம.சு.மு.வும் தேவதை கதைகளைக் கூறி வாக்குகளை கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது - ரில்வின் சில்வா குற்றச்சாட்டு

ஐக்­கிய தேசியக் கட்­சியும், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் நல்­லாட்சி ஜன­நா­யகம் என்ற “தேவதைக்” கதை­களை கூறி வன்­மு­றை­களை மூல­த­ன­மாக்கி தேர்­தலில் வெற்­றி­பெற முயற்­சிக்­கின்­றன. எனவே, மக்கள் இவர்­களை நிரா­க­ரிக்க வேண்­டு­மெனத் தெரி­வித்த ஜே.வி.பி.யின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா ஜே.வி.பி.க்கு பாரா­ளு­மன்­றத்தில் அதிக பலத்தை வழங்க வேண்டும் என்றும் தெரி­வித்தார்.

பெல­வத்­தையில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஜே.வி.பி. யின் ஊடக விய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே ரில்வின் சில்வா இவ்­வாறு தெரி­வித்தார்.
இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்;

நாட்டில் நல்­லாட்­சியை உரு­வாக்கும் ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்­துவோம். ஊழல்இ மோச­டிகள்இ திருட்டு இல்­லாத யுகத்தை ஏற்­ப­டுத்­துவோம் என ஐ.தே.கட்­சியும்இ ஐ.ம.சு. முன்­ன­ணியும் தேவதைக் கதை­களை கூறி மக்­களின் வாக்­கு­களை கொள்­ளை­ய­டித்து தேர்­தலில் வெற்­றி­பெற முயற்­சிக்­கின்­றன.
ஆனால் ஐ.ம.சு.முன்­ன­ணியின் வேட்­பா­ளர்கள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் ஒற்­று­மை­யில்லை. இவர்­களின் கூட்­டங்­களில் தமது கட்சி வேட்­பா­ளர்­க­ளுக்கு எதி­ரா­கவே “கூச்சல்” போடும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.
இவ்­வா­றான நிலைமை கார­ண­மாக மஹிந்த கலந்து கொள்ளும் கூட்­டங்­களில்இ தான் கலந்து கொள்ள மாட்டார் என மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்­துள்ளார். இந்த “கூச்சல்” போடும் நிலைமை தொடர்­க­தை­யா­கி­விட்­டதால் கூட்­டங்­களில் “கூச்சல்” தொடர்ந்தால் நானும் கூட்­டங்­களில் கலந்­து­கொள்ளப் போவ­தில்­லை­யென மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார். இவ்­வாறு ஐ.ம.சு.முன்­ன­ணிக்குள் ஒற்­றுமை இல்லை. இவர்­களால் எவ்­வாறு நாட்டை நிர்­வ­கிக்க முடியும்?
அதே­வேளை ஐ.தே.கட்சியினர் அதி­கா­ரத்­திற்கு வரு­வ­தற்கு முன்பு அதி­கா­ரத்தை கையி­லெ­டுத்து ஆட்டம் போடு­கின்­றனர். பொலி­ஸா­ருக்கு மிரட்டல் விடுக்­கின்­றனர். கொழும்பில் வெள்ளிக்கிழமை இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டுச் சம்­ப­வத்­துடன் பாதாள உலக கோஷ்­டி­யினர் தொடர்­பு­பட்­டுள்­ளனர். ஐ.ம.சு.மு.கட்­சியின் சிலர் பாதாள உலகக் கோஷ்­டி­யி­ன­ருடன் தொடர்­பு­களை வைத்­துள்­ளனர்.
நல்­லாட்சி, ஜன­நா­யகம் என தேவதைக் கதை­களை கூறு­வோரின் உண்­மை­யான நிலை இது­வாகும். எனவே தேவதைக் கதைகளுக்கு மக்கள் ஏமாந்து போகாது தேர்தலில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். பாராளுமன்றத்தில் ஜே.பி.பி.யின் பலத்தை அதிகரிக்க வேண்டு மென்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
virakesari.lk

Post a Comment

0 Comments