ஐதேகவின் வெற்றியை உறுதிப்படுத்தும் இறுதிக் கூட்டம் நேற்று கொழும்பு மருதானை டவா் அரங்கு அருகில் பெரும் ஜனத்திரளில் சங்கமித்து நடந்து முடிந்தது. ஐதேக தலைவா் ரணில் விக்கிரமசிங்க, மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளர் முஜீபுர் றஹ்மான் உட்பட முக்கிய வேட்பாளர்கள் பலா் கலந்து கொண்ட பிரசார கூட்டம் நள்ளிரவு 12 மணிவரை நடைபெற்றது.
கடந்த காலங்களில் ஐதேக பல இடங்களில் தோல்வியடைந்த போது, மத்திய கொழும்பு மக்கள் ஐதேகவை வெற்றிபெற செய்து கட்சியை தலைநிமிர வைத்ததாக வேட்பாளா் முஜீபுா் றஹ்மான் தனது உரையில் குறிப்பிட்டதுடன், மத்திய கொழும்பு மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வாழ்வதாகவும், அவா்களின் அடிப்படை வசதிகள் முற்றாக மறுக்கப்பட்டு இருப்பதாகவும் அவா் கூறினாா்.
கடந்த 20 வருடங்களாக ஐதேகவை பாதுகாத்து வந்த மத்திய கொழும்பு மக்கள் மஹிந்த ஆட்சியில் திட்டமிட்டு ஓரங்கட்டப் பட்டதாகவும் பழிவாங்கப்பட்டதாகவும் மேலும் அவா் கூறினாா்.
இந்த அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எதிா்வரும் தோ்தலில் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஒரு ஆட்சியை அமைக்க ஒன்றுபடுமாறு முஜீபுா் றஹ்மான் வேண்டுகோள் விடுத்தாா்.

0 Comments