Ticker

6/recent/ticker-posts

சவுதியில் இலங்கையா் இருவருக்கு சிரச்சேதம்!

சவூதி அரேபியாவில் இன்று  இரண்டு இலங்கையர்களுக்கு சிரச்சேதம் செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒமர் பின் யஸ்லம் பின் ஸைத் என்பவரை  கொலை செய்து அவரின் உடைமைகளை கொள்ளையடித்த குற்றத்துக்காகவே இந்த இலங்கையர்களான கயான் உதித நாணாயக்கார மற்றும் துஷார தினேஷ் பெரேரா ஆகியோருக்கு  மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒமர் பின் யஸ்லம் பின் ஸைத் என்பவரின் வீட்டுக்குள் நுழைந்த இவர்கள், அங்கிருந்த வீட்டு உரிமையாளரான ஒமர் பின் யஸ்லம் பின் ஸைத் என்பவரை தலையில் அடித்துக் கொலை செய்ததாகவும், அங்கிருந்த பணத்தைக் கொள்ளையிட்டதாகவும் இவா்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு, குற்றம் நிரூபிக்கப் பட்ட நிலையில்  இவா்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என சவூதி அரேபிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ள்ளது.
இவர்கள் மூவருக்கும், செங்கடல் நகரான ஜெட்டாவில் வைத்து சிரச்சேதம் செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments