Ticker

6/recent/ticker-posts

பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க JVPயைப் பலப்படுத்துக: அநுரகுமார திசாநாயக்க

மக்கள் விடுதலை முன்னணியின் இறுதி பிரசாரக்கூட்டம், அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு புதுக்கடை பகுதியில் நேற்றிரவு (14) நடைபெற்றது.

இதன்போது, அநுரகுமார திசாநாயக்க, கூட்டு அரசாங்கம் உருவாக்கப்பட உள்ளதாகவும் அந்த அரசாங்கம் மக்களை ஒடுக்கி, தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் போது, அதற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க மக்கள் விடுதலை முன்னணியைப் பலப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், 2020 ஆம் ஆண்டளவில் ஆட்சியைப் பரிமாறி பாராளுமன்றத்தின் அதிகாரத்தை அதிகரிப்பதற்காக தாம் மிகப்பெரிய மக்கள் அணியொன்றை உருவாக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments