Ticker

6/recent/ticker-posts

ஐ.தே.க அரசாங்கத்திலும் திருடர்கள், மோசடிக்காரர்கள் உள்ளனர் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

ஜனநாயகக் கட்சியின் இறுதித்தேர்தல் பிரசாரக்கூட்டம் கொட்டாவையில் இடம்பெற்றது.
ஜனநாயகக் கட்சியின் தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பின்வருமாறு குறிப்பிட்டார்;
அனைத்துத் திருடர்களையும் பிடிப்பார்கள் என 8 ஆம் திகதி எதிர்பார்த்தீர்கள். இன்று வரை அது நடைபெறவில்லை. திருடர்களுக்கு தொடர்ந்தும் சிறப்புச் சலுகைகள் கிடைக்கின்றன. நீதிமன்றங்களில் இருந்து உத்தரவுகளைப் பெற்றுக்கொள்கின்றனர். சுதந்திரமாக இருக்கின்றனர். ஆகவே, இதனை நாங்கள் சீர் செய்ய வேண்டும். அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். 8 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அரசாங்கத்திலும் திருடர்கள் மற்றும் மோசடிக்காரர்கள் உள்ளனர். இதனை அந்தக் கட்சி புரிந்துகொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments