புங்குடுதீவில் (பன்னிரெண்டாம் வட்டாரத்தில்) சொக்கலிங்கம் அகடமி ஆரம்பிக்கப்பட்டு பதினான்கு ஆண்டு நிறைவு விழாவையும் மற்றும் புங்குடுதீவு "தாயகம் சமூக சேவை அகம்" அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு நான்காவது வருட நிறைவு விழாவையும் முன்னிட்டு "புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம்" அமைப்பினால், புங்குடுதீவு ஸ்ரீகணேச மகாவித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் "புங்குடுதீவு தாயகம் நூலகம்" என்ற பெயரில் நூலகம் திறந்து வைக்கப்படவுள்ளது. மேற்படி விழா 30.04.2016 சனிக்கிழமை மாலை 02.00 (14.00) மணியளவில் நடைபெறவிருக்கிறது
0 Comments