Ticker

6/recent/ticker-posts

இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்த அமெரிக்கா அறிக்கையால் பிரிட்டன் கவலை

இலங்கையில் மனித உரிமை நிலவரங்கள் குறித்து அமெரிக்கா அளித்துள்ள அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் கவலை அளிப்பதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. 

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போரில் பல்வேறு போர் குற்றங்கள் நடந்ததாக புகார் எழுந்தது. 
இதை தொடர்ந்து இலங்கையில் மனித உரிமை நிலவரங்கள் குறித்து அமெரிக்கா அண்மையில் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. சித்தரவதை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட புகார்களை மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து எழுப்பி வருவதாகவும், தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலை இன்னும் சீரடையவில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் மனித உரிமை நிலவரங்கள் குறித்து அமெரிக்கா அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் கவலை அளிப்பதாக பிரிட்டன் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மனித உரிமையை பாதுகாப்பதில் இலங்கை அரசு இனி தீவிர கவனம் செலுத்தும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments