Ticker

6/recent/ticker-posts

ஹிருணிகாவிற்கு அழைப்பாணை!- 29 குற்றச்சாட்டுகள்

இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கப்பட்டமை சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர உட்பட சிலருக்கு எதிராக நீதிபதியினால் தொடரப்பட்ட வழக்கு செப்டம்பர் 21ம் திகதி விசாரணைக்கு கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் அன்று ஆஜராகுமாறு பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி அல்லது அதற்கு நெருங்கிய நாட்களில் தெமட்டகொடயில் அமில பிரியங்க அமரசிங்க என்பவரை தடுத்து வைக்கும் நோக்கில் கடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது,
அமரசிங்க என்பவரை தடுத்து வைப்பதற்கு தீர்மானித்திருப்பது சட்டவிரோத கூட்டத்தில் உறுப்பினர்களாக செயல்பட்டமை, அவ்வாறு செயல்பட்டு அவரை கடத்திச் சென்றமை, குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை, குற்றத்திற்கு வற்புறுத்தல், அடக்குமுறைக்கு உள்ளாக்குதல், கொலை மிரட்டல் உட்பட 29 குற்றங்களின் கீழ் நீதிபதியினால் ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் பீ.டப்ளியூ கெலும் நிரஞ்சன, மலிந்த ஜயதிலக, ஆர்.ஏ கசுன் சம்பத், இந்திக ருவன் புஷ்பகுமார சொய்சா, மைக்கல் என்டனி ஜோன்சன், சஞ்சீவ அபேசிறிவர்தன, நியாப் மொஹமட் ரிஸ்வான் மற்றும் ஜெகநாதன் என்டனி ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமில பிரியங்க அமரசிங்க என்பவர் 62-1859 இலக்கத்தின் கறுப்பு டிபெண்டர் வாகனத்தை கடத்திச் சென்றதாக தெமட்டகொட, பேஸ்லைன் வீதியில் வசிக்கும் கலீல் மொஹமட் சப்ரினாஸ் என்பவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. tamilwin.com

Post a Comment

0 Comments