Ticker

6/recent/ticker-posts

பிரபல கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி சிறப்பு தபால்தலையை ஐ.நா. சபை வெளியிடுகிறது!

மறைந்த பிரபல கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி  ஐ.நா. சபையின் தபால் இலாகா நிர்வாகம் சார்பில் இந்தியாவின் சுதந்திர தினமான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அவருடைய சிறப்பு தபால் தலை வெளியிடப்படுகிறது.

இது தவிர, இந்த ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை ஐ.நா. சபையில் சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டு இருக்கிறது. அன்று ஐ.நா. சபை பொதுஅரங்கில் ஆஸ்கார் விருது பெற்ற பிரபல இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. இதில் ஐ.நா. தூதரக அதிகாரிகள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

மேற்கண்ட தகவல் ஐ.நா. சபைக்கான நிரந்தர இந்திய தூதர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments