பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோரைக் கைது செய்ய பொலிஸ் பாரிய நிதிக் குற்றப் பிரிவு சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஏ.டி.ராஜபக்சவின் நினைவு மண்டபத்தை அமைக்க தாழ் நிலத்தை நிரப்பும் சபையிடமிருந்து 61 மில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொண்டதற்காக கோத்தபாய ராஜபக்சவிடம் விசாரணை நடத்தவும்,
ஜனாதிபதி நிதியத்திலிருந்து 20 மில்லியன் ரூபாவைச் சிகிச்சைக்காக பெற்றுக் கொண்டதற்காக கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் விசாரணை நடத்தவும்,
விளையாட்டுத்துறை அமைச்சுக்கு விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பாக மகிந்தானந்த அளுத்ஹகமகேவிடம் விசாரணை நடத்தவும்,
இவர்களைக் கைது செய்ய வேண்டுமென சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. tamilwin.com

0 Comments