கைரிய்யா பாடசாலையின் சிற்றுண்டிச்சாலையில் மென்பானங்கள் விற்பதற்கு தடை விதிக்கபட்டிருந்தது.மாணவர்கள் சிறு வயதிலிருந்தே பல வித நோய்கள்களுக்கு ஆளாவதற்கு இந்த மென்பானங்கள் காரணமாக அமைவதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
இந்நிலையில் மேற்படி மென்பானங்களை விற்பதை பாடசாலை அபிவிருத்திச் சங்கம் தடை செய்தது.
அன்று சிற்றுண்டிச்சாலையை நடாத்தியவர்கள் அதிபரின் விசிரிகளும், விசுவாசிகளும் என்பதால் 'கேட்கும் மாணவர்களுக்கு மட்டும்' விற்பனை செய்யுங்கள் என்ற அதிபரின் ஆலோசனையை வைத்து இந்த மென்பானம் இரகசியமாக மாணவர்கள் மத்தியில் விற்பனை செய்யப்பட்டது.
பாடசாலை அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்களுக்கு இந்த விடயம் தெரிய வந்தபோது. இந்த நச்சுப்பானத்தை அதிபரின் ஆசிர்வாதத்தோடு விற்பனை செயத சிற்றுண்டிச்சாலை ஊழியர்களோடு முரண்பட்ட பெற்றோர், அதிபரோடும், அப்போது உதவி அதிபராக இருந்த தற்போதைய அதிபரோடும் வாக்குவாதப்பட்டனர்.
பல வருடங்களுக்கு முன் இடம்பெற்ற இந்த சம்பவத்தை அண்மையில் மேற்படி கைரியா அதிபர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி அண்மையில் நடந்த பொதுக் கூட்டத்தில்..
'' எனக்கு மிகவும் தொல்லை தந்தவர்கள் தான் இந்த பெற்றோர்கள் இவர்கள் மென்பானங்களைக் கூட விற்பதற்கு எதிராக என்னோடு சண்டையிட்டவர்கள்'' என்ற கருத்தை முன்வைத்தார்.
பிள்ளைகளின் நன்மைக்காக பாடசாலை அபிவிருத்திச் சங்கம், அவரோடு பிர்ச்சினைப்பட்டதை ஏதோ பாடசாலைக்கு எதிராக போராடிய சம்பவமாக காட்ட மூடத்தனமாக முற்பட்டு தனது மூக்கை உடைத்துக்கொண்டார்.
பிள்ளைகளுக்கு பணத்திற்காக நஞ்சை ஊட்டுவது குற்றம் என்று வாதிட்ட பெற்றோரை குற்றவாளிகளாக்கி ஏனைய பெற்றோரை கைரியா அதிபர் திசை திருப்பியது ஒரு கன்றாவித்தனமான மோசமான நடவடிக்கையாகும்.
தனது பிள்ளைகளுக்கு நஞ்சை ஊட்டுவதை மறைமுகமாக ஏற்றுக்கொண்ட அதிபரின் புதிய விசிறிகளான ஒருசில பெற்றோர்கள் அதிபரின் இந்த நாசகார வேலைக்கு நன்றாக கரகோசம் கொடுத்து பாராட்டி மகிழ்ந்தனர்.
பணத்திற்காக, தனது பிஞ்சுகளுக்கு நஞ்சை கொடுத்த கைரியா அதிபரின் மனித நேயமற்ற செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், அவருக்கு நல்லவர் பட்டம் கொடுத்த ஒருசில பெற்றோர்களின் அறியாமையை நினைத்து அழுவதா சிரிப்பதா?
நீங்களே சொல்லுங்கள்.
(இது ஒரு பெற்றாரின் மனக்குமுறல்)
0 Comments