புதிய பஸ் கட்டண திருத்தத்தைவிட அதிகமாக கட்டணங்களை அறவிடும் பஸ்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று காலை முதல் இது தொடர்பான சோதனை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம். ஏ. பி . ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவ்வாறு அதிக பணம் அறவிடப்படும் பஸ்களுக்கெதிராக தண்டப்பணம் அறவிடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று பெஸ்டியன் மாவத்தையில் பஸ்களில் சோதனைகளில் ஈடுபட்டதாகவும் எனினும் பஸ் கட்டணங்கள் தொடர்பான சோதனைகள் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தார்.
0 Comments