Ticker

6/recent/ticker-posts

மங்களவின் மாதிரி பொருந்தாது

காணாமற் போனோருக்கான அலுவலகம் தொடர்பில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சமர்பித்துள்ள மாதிரியுரு இலங்கைக்கு பொருத்தமானதல்ல என கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு ஜனநாயக நாடு. அதன் படைகள் பயங்கரவாத இயக்குத்துக்கு எதிராக சட்டபூர்வமான யுத்தத்தை நடத்தி, அதில் வெற்றிக்கண்ட நாடு. 

இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த லத்தீன் அமெரிக்கா நாடுகளிலேயே இந்த காணாமல் போனோருக்கான அலுவலகம் அமைக்கப்பட்டது. 

இந்நிலையில் இலங்கையில், காணாமல் போனோருக்கான அலுவலகம் தொடர்பிலான மாதிரியுருவை மங்கள சமரவீர ஏற்றுக்கொண்டிருப்பது பொருத்தமானதல்ல என்றும் அவர் கூறினார். 

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 'ஆசியாவின் எந்த நாட்டிலும் போரின் பின்னரான இதுபோன்ற காணாமல்போனோருக்கான அலுவலகம் என்ற பொறிமுறை நிறுவப்படவில்லை. ஜனநாயக நாடான ஸ்பெயினில் கூட இப்படி நடக்கவில்லை. 

அறம் சார்ந்த மனிதாபிமானம் என்ற வகையில், காணாமல் போனோர் தொடர்பாக தேடல் மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவால் செய்யப்பட்டுவிட்டது. இதில் ஏதும் குறையிருப்பின் இந்த ஆணைக்குழுவின் பணியை புதுப்பித்து அல்லது மாற்றியமைத்து பணியை முன்னெடுக்கலாம். ஆனால், மங்கள பேசும் காணாமல் போனோருக்கான அலுவலகம் தொடர்பில் எந்த தருக்க சிந்தனைகளையும் காணவில்லை' என்றார். tamilmirror.lk

Post a Comment

0 Comments