வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தால் வழங்கப்பட்ட ஒரு தொகை உணவுப் பொதிகளை கொழும்பிலுள்ள பாடசாலைகளுக்கு வழங்கும் நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
முக்கிய அமைச்சர்கள் இருவர் பாடசாலைகளுக்கு இந்த பழுதடைந்த உணவுப்பொட்டலங்களை வழங்கி வருவதாக பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த உணவுப் பொதிகள் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தால் வழங்கப்பட்டிருக்கின்றன.
பல மாதங்களாகியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அவதியுற்ற வேளையில் அவர்களுக்கு வழங்கப்படாமல் பதுக்கிவைக்கப்பட்டு காலாவதி தினம் நெருங்கும் தருவாயில் அவற்றை குறித்த இரண்டு முஸ்லிம் அமைச்சர்களும் பாடசாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனர்.
மாணவர்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய நிலையில் துர்நாற்றத்துடன் பழுதடைந்து இருக்கும் இந்த உணவுப்பொதிகளில் தயாரிப்பு வருடம் 2014ம் ஆண்டு என குறிக்கப்பட்டுள்ளது.
அதன் காலாவதி தினம் நவம்பர் 2016 எனவும் குறிக்கப்பட்டுள்ளது.












0 Comments