சொத்து விபரங்களை வெளியிடாத அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளது.
எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னதாக சொத்து விபரங்களை வெளியிடத் தவறும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக இவ்வாறு வழக்குத் தொடரப்பட உள்ளது.
இந்த மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக சொத்து விபரங்களை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இவ்வாறு சொத்து விபரங்களை வெளியிடத் தவறும் அனைத்து அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் வழக்குத் தொடரப்பட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகள் கட்சித் தலைவர்கள் சபாநாயகரிடமும், நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யாத அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் ஆணைக்குழுவிடமும் சொத்து விபரங்களை ஒப்படைக்க வேண்டும்.
அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் தங்களது சொத்து விபரங்களை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஓர் அரசியல் கட்சியின் தலைவர் என்பதனால் அவரது சொத்து விபரங்களையும் தேர்தல் அணையாளரிடம் ஒப்படைக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.tamilwin.com

0 Comments