நேற்று காலை 10.00 மணியளவில் கம்பளை, குருந்துவத்தை நகர பஸ் தரிப்பிடத்தில் ஒரு அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதனை சர்வமத சமாதான அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
அண்மையில் கொழுவல, குருந்துவத்த ஸ்ரீ போதிராஜாராம விஹாராதிபதி அவர்களை சில அரசியல் பின்னனியுள்ளவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் அவருடைய ஒரு கை மிகவும் பாதிக்கப்பட்டு கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது:
குறித்த பிக்கு தமது கிராமத்திலுள்ள விஹாரையுனூடாக போதைப் பொருள் விற்பளைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்குக் கோபமடைந்த இத்துடன் தொடர்புடையவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும், இது முதல் தடவையல்ல இரண்டாம் தடவையான தாக்குதல் எனவும் குறித்த பிக்கு தெரிவித்துள்ளார். மட்டுமல்லாமல் குறித்த நபர்கள் கண்டி மாவட்டத்திலுள்ள ஒரு பிரபல அமைச்சரின் ஆதரவாளர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த அமைதிப் பேரணியில் கண்டி, கம்பளை ஜம்இய்யத்துல் உலமா உறுப்பினர்கள் மற்றும் சர்வமத மதகுருமார்களும் பொது மக்கள் பலரும் கலந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
http://acjugampola.blogspot.com/2016/10/blog-post.html
http://acjugampola.blogspot.com/2016/10/blog-post.html



0 Comments