அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு அரச பாதுகாப்பு சம்பந்தமான உயர் பொறுப்புகளை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில், அரச பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு பொறுப்புக் கூறும் செயற்பாட்டு ரீதியான பதவி ஒன்றை ஏற்படுத்த உள்ளதாக தெரிவருகிறது.
இதன் பின்னர் அந்த பதவியில் சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட உள்ளார்.
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி அரச தலைவர் முப்படை தளபதி என்பதுடன் பாதுகாப்பு அமைச்சும் அவரது கட்டுப்பாட்டின் கீழேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments