Ticker

6/recent/ticker-posts

யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு வாள் வெட்டு!


சுன்னாகம் நகரப்பகுதியில் இனந்தெரியாதவர்களின் வாள்வெட்டில் இரண்டு பொலிஸார் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இன்று பகல் சுன்னாகம் நகரப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸார் மீதே இ்ந்த வாள்வெட்டு  தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது  இவர்கள் இருவரும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக  சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவருக்கு தலையிலும் மற்றயவருக்கு கையிலும் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலக்கத்கடு இல்லாத இரு சக்கர வண்டியில் வந்த இருவரே இந்தத் தாக்குதலை நடாத்தி விட்டு செனறதாகவும் அறிய வருகிறது

Post a Comment

0 Comments