Ticker

6/recent/ticker-posts

மீள் பார்வை 20ஆண்டு நிறைவு விழா



(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
மீள் பார்வை பத்திரிகையின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழா நாளை மறுநாள் 16ஆம் திகதி புதன்கிழமை மாலை 6 மணிக்கு கொழும்பு - 10 இல் அமைந்துள்ள தபால் தலைமையகக் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேசிய ஊடக மத்திய நிலையத் தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கலந்து கொள்வார்.

நிகழ்வில்சிறப்புப் பேச்சாளராக  அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ரங்க கலன்சூரியமற்றும் கௌரவ விருந்தினர்களாக அக்குறணை அல் - குர்ஆன் திறந்த கல்லூரியின் பணிப்பாளர் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்சூர்ஜமாஅத்துஸ் ஸலாமாவின் தலைவர் உஸ்தாத் அஸாத் அப்துல் முயிட் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
விழாவில்2017ஆம் ஆண்டுக்கான கலண்டர் அறிமுகம் மற்றும் விற்பனையும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments