(அஷ்ரப் ஏ சமத்)
கிராமங்கள் நகரங்களில் வாழும் மக்களுக்கு அரச சேவைகளில் 65 வீதத்தினை உள்ளுராட்சி சபைகளே வழங்குகின்றன. சூழல், குடிநீர், வீதி, சுகாதாரம் போன்ற சேவைகளையும் உள்ளுராட்சி சபைகள் மக்களுக்கு வழங்குகின்றன.
பொதுமகன் தனது வீடொன்றை நிர்மாணிப்பதற்கும், தனது காணியில் உள்ள மரம்மொன்றை வெட்டுவதற்கும், கட்டிடப்பொருட்கள் அகழ்வதற்கும். குப்பைகள் அகழ்வது , குடும்ப சுகாதாரம், தமது வீட்டில் மரணங்கள் கூட இடம் பெற்றால் கூட உள்ளுராட்சி சபைகளது சேவையை பெறுவதற்கு மக்கள் நாடி வருவாா்கள். என பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தெரிவித்தாா்
15 நாடுகளைச் சோ்ந்த உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகளது மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் அடங்கிய சர்வதேச மாநாடு (14-17) மூன்று நாட்களுக்கு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்று வருகின்றது. இவ் மாநாட்டின் ஆரம்பக் கூட்டம் 13ம் திகதி பி.பகல் 7.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இம்மாநாட்டுக்கு இலங்கைப் பிரநிதியும் அரசு சாா்பாகவும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாநாட்டை ஆரம்பித்து வைத்தாா்.
கௌரவ அதிதியாக சுவிட்சிலாந்து நாட்டின் இலங்கைத் துாதுவரும் கலந்து கொண்டு உரையாற்றினாா், மேற்படி மநாட்டின் தொடக்க அரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு அலிசாஹிர் மௌலானா தெரிவித்தாா்
தொடா்ந்துஅங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா -
கிழக்கு மாகணத்தில் உள்ளுராட்சி சபையொன்றின் தலைவராகவும், மாகாணசபை உறுப்பினர், மற்றும் பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகித்து இலங்கையின் உள்ளுராட்சி சபைகள் பற்றி தனது அனுபவத்தை விவரித்தாா், கிராம நகர மக்களோடு மிக நெருக்கமாகவும் அவா்களது அரச சேவைகளில் 65 வீதத்தினை உள்ளுராட்சி சபைகள் ஊடாகவே சேவைகள் பெற்றுக் கொள்கின்றனா்.
உள்ளுராட்சி சபை மக்கள் பிரநிதிகளோடு மிக நெருக்கமாகவும் கிராம மக்களோடு நாமும் இணைந்து சேவை செய்யக் கூடிய ஒரு சேவை நிறுவனம்தான் உள்ளுராட்சி சபைகள். அவைகள் நவீன முறைமைக்கேற்ப கணனிமயப்படுத்தி ஒரு வலையமைப்பு முறையில் சேவைகள் மேலும் விருத்தி செய்யப்படல் வேண்டும். இம்மாநாட்டினை கொழும்பில் ்நடாத்துவதற்கு தெரிவு செய்தமையிட்டு இலங்கை அரசு சாா்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மொலானா அங்கு தெரிவித்தாா்.
இம் மாநாட்டுக்கு சுவிட்சலாந்து நாடு அனுசரணை வழங்கி உள்ளுராட்சி நிறுவாகத்தினை ”லொஜின் நெட்வேக் ”என்ற நிறுவனம் ஊடாக செயல்படுத்துவதற்கும் இம்மாகாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கும் தீர்மானித்துள்ளது.. இம்மாநாட்டின்போது இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம்,பாகிஸ்தான்,, பிலிப்பைன்ஸ்,இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், மொங்கோலியா, மாலைதீவு, கம்போடியா, போன்ற நாடுகளின் உள்ளுராட்சியில் அங்கம் வகிக்கும் தலைவா்கள் மற்றும், உள்ளுராட்சி சபைகளின் அதிகாரிகளும் இதனை நெறிப்படுத்தும் சுவிட்சலாந்து நாட்டின் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.
0 Comments