உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமாமலீ றஹ்மான் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று (13) சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை தஜிகிஸ்தான் ஜனாதிபதி நேற்று (13) மாலை சபநாயகர் கரு ஜயசூரியவையும் சந்தித்தார்.
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமாலி ரமோன் இன்று நாட்டில் இருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தஜிகிஸ்தான் ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர்.
0 Comments