பூநகரி வினசியோடை வித்தியால மாணவர்களுக்கு கற்றலுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்கள் இலங்கை இராணுவ படையினரால் நன்கொடையாக அண்மையில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் குறைந்த வருமானத்தினை பெறுகின்ற குடும்பங்களின் 96 பிள்ளைகளுக்கு பாடசாலை பைகள், கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடசாலை சீருடைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டதாக இராணுவ ஊடப்பிரிவு தெரிவிக்கின்றது.
மாணவர்களின் கல்வித்தரத்தினை மேம்படுத்தும் வகையில் சுமார் இரண்டு இலட்சத்து முப்பது ஆயிரம் ரூபாய் பெறுமதியான பாடசாலை கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கு தேசிய சுற்றுலா வழிகாட்டல் விரிவுரையாளர்கள் சம்மேளனம் மற்றும் 'கைண்ட் ஹார்ட் சம்மேளனம் ஆகியன இந்த நிகழ்வுக்கு அணுசரனை வழங்கியது.
அண்மையில் நீடித்த சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த இம்மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையக படைப்பிரிவினரினால் தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, இப்பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாலத்தில் திருத்த வேலைகளை மேற்கொண்டு மக்களின் அன்றாட போக்குவரத்து சீரமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
0 Comments