Ticker

6/recent/ticker-posts

ஜெயலலிதா மரண மர்ம முடிச்சுகள்: மோடிக்கு கடிதம்: கௌதமிக்கு மக்கள் ஆதரவு!

தமிழ்நாடு  முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது? எதற்காக இவ்வளவு மர்மமாக அவர் வைக்கப்பட்டிருந்தார்? அவருக்கு மரணம் நிகழ்ந்தது எப்படி? இதுபோன்ற கேள்விகள் சாமான்ய மக்களிடமே இருக்கிறது. யாராவது ஒருவர் முன்வந்து அந்த மர்ம முடிச்சை அவிழ்க்க முற்பட வேண்டாமா?
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 5ஆம் தேதி காலமான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது?  அவர் கோடிக்கணக்கான மக்களால் நேசிக்கப்பட்டவர். அவருக்கே இப்படியொரு நிலையா? என்பதால் தான் பிரதமருக்குக் கடிதம் எழுதினேன் என்கிறார் நடிகை கௌதமி.
ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மத்தை அவிழ்க்க வேண்டும் எனக் கோரியு நடிகை கவுதமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது சர்ச்சைகள் எழுந்துள்ளன. அவரது முயற்சிக்கு பரவலான மக்களிடமிருந்து ஆதரவு குவிகிறது.
"இக்கடிதம் தொடர்பாக பொதுமக்கள் பலரும் எனக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். தங்களின் மனதில் இருந்த கேள்விகளை நான் கேட்டதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். இதை பார்த்ததும் இன்னமும் மகிழ்ச்சி அதிகரித்துள்ளது. எல்லோருடைய எண்ணத்திற்கும், நான் குரல் கொடுத்துள்ளேன் என்றே நினைக்கிறேன். பொதுவான பிரச்சினைகள் பலவற்றுக்கு இதற்கு முன்பும் நான் குரல் கொடுத்துள்ளேன்" என்று கூறுகிறார் கௌதமி.
பிரதமருக்கு கடிதம் அனுப்பியது ஏன்? என்பது தொடர்பாக நடிகை கவுதமி அளித்த பேட்டி ஒன்றின் விபரம் வருமாறு:
ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த இடத்தில் சந்தேகம் உள்ளது என்று குறிப்பிட்டு தெரிவிக்க விரும்பவில்லை. யார் என்ன செய்தார்கள்?, யார் பொறுப்பு? என்பது பற்றியும் நான் பேசவில்லை. ஏனெனில் நாம் எல்லோருமே பொறுப்பாளர்கள்தான். பல கோடிப் பேருக்கு இருக்கும் சந்தேக த்தைதான் நான் கேட்கிறேன். 
நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர் பிரதமர். மாநிலத்திற்கும் மேலே ஒரு அதிகார மையம் என்றால் அது மத்திய அரசுதான். எனவேதான் நான் மோடிக்கு கடிதம் எழுதினேன். எளிதாக அணுகக்கூடிய பிரதமர் மோடி. யார் வேண்டுமானாலும் அவரை தொடர்பு கொள்ள முடியும். 'டிவிட்' செய்யலாம், கடிதம் எழுதலாம். 
எனக்கு தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா இறப்பில் எந்த ஓர் இடத்திலும் குறிப்பிட்டு சொல்லும்படியான சந்தேகம் இல்லை. ஏதாவது ஒன்று தெரிந்தால் சந்தேகப்படலாம். எதுவுமே தெரியாத போது மொத்த நிகழ்வுமே சந்தேகத்திற்கு  உட்பட்டதாக உள்ளது. 
மோடி எனது கடிதத்திற்கு பதிலளிப்பார் என்ற நம்பிக்கையுள்ளது. எனவே, வேறு யாரையும் அணுகவில்லை. இப்போதுதானே கடிதம் எழுதியு ள்ளேன். அதை படித்துவிட்டு பதிலளிக்க கொஞ்சம் தாமதம் ஆகத்தான் செய்யும். இவ்வாறு நடிகை கௌதமி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments