Ticker

6/recent/ticker-posts

ஆடம்பர வாகனத்தை ஓட்டிவந்து தப்பியோடியவர் அமைச்சர் கபீர் ஹஷீமின் மகனா?

கடந்த 17ம் திகதி காலை 6.15 மணியளவில், தலவத்துகொட கால்வாயில் விழுந்த ஆடம்பர BMW வாகனம்  முக்கிய அரசியல் புள்ளி ஒருவரின் உறவினர் ஒருவரினால் செலுத்தப்பட்டு விபத்துக்குள்ளானதாக செய்திகள் வெளிவந்தன.

எனினும், இந்த வாகனம் அமைச்சர் கபீர் ஹசிம், அவர்களின் உறவினர் ஒருவருக்கு சொந்தமான வாகனம் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.


வாகனம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து வாகனத்தை செலுத்தி வந்தவர் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார்.

வழமையாக அரசியல்வாதிகளும், அரசியல்வாதிகளின் வாரிசுகளும் வாகன விபத்துகளின் போது இந்த தப்பியோடும் நடைமுறையை நாடகத்தை  தொடர்ந்தும் அரங்கேற்றி வருகின்றனர்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிராத இந்த வாகனம், சில தினங்களுக்கு முன் ஆறு கோடி ரூபாய்களுக்கு கொழும்பிலுள்ள Bavarian Motors Pvt Ltd   நிறுவனத்திலிருந்து கொள்வனவு செய்யப்பட்டதாக அறிய வருகிறது.

விபத்திற்கு பின்னர்  உண்மையான சாரதி தப்பியோடிய நிலையில் வேறு ஒருவர் சாரதியாக பொலிஸில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.

என்றாலும் சண்டே ரைம்ஸ் ஆங்கிலப் பத்திரிகை குறித்த வாகனத்தை ஓட்டி வந்தவர் கபீர் ஹஷீம் அவர்களின் மகன் என்று செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments