தனக்கு ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிலிருந்து அமெரிக்கா செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லையென நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
தனது ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு நாமல் ராஜபகஷ தனது உறவினர் ஒருவரின் மரணச் சடங்கில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்ல இருந்த நிலையில் இவருக்கு அமெரிக்காவுக்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தனது ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு நாமல் ராஜபகஷ தனது உறவினர் ஒருவரின் மரணச் சடங்கில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்ல இருந்த நிலையில் இவருக்கு அமெரிக்காவுக்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷ மொஸ்கோவில் இருந்து, அமெரிக்காவின் டொக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹொஸ்டன் நகருக்கு விமானத்தில் செல்ல முயன்றார்.
ஆனால், எமிரேட்ஸ் விமான சேவை அதிகாரிகள், நாமல் ராஜபக்ஷவை, விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை.
நாமல் ராஜபக்ஷவை விமானத்தில் ஏற்ற வேண்டாம் என்று அமெரிக்க அதரிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக எமிரேட்ஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
0 Comments