அமைச்சரவையின் எண்ணிக்கையை 30ஆக மட்டுப்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்தால், தானும் ரிஷாட் பதியூதினும் எவ்வித அமைச்சுப் பதவிகளையும் பெறமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பதிவிட்டு மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்..
அத்தோடு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஆளுங்கட்சியினரின் கூட்டத்தில் இது தொடர்பான தமது அபிப்பிராயங்களை தானும், ரிஷாட்டும் தெரிவித்ததாகவும் மனோ கணேசன் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அரச கட்சி கூட்டத்தின் போது பிரதமர், அமைச்சர் தொகையை 30க்குள் வைத்துக்கொள்ள தான் தடுமாறுவதாகவும், எவராவது சுயமாக முன்வந்து அமைச்சு பதவிகளை பெறாமல் இருக்க முடியுமா எனக்கேட்டார். அவசியமானால், நான் அமைச்சு பதவி ஏற்காதிருக்கிறேன் என்றேன். நண்பர் ரிசாத் பதியுதீனும் அதையே சொன்னார்.” என பதிவிட்டுள்ளார்.

0 Comments