ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு கூடியது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில், பாராளுமன்ற அமர்வின் போது ஆளுங்கட்சியில் அமர்ந்த விஜித் விஜயமுனி சொய்சா, இந்திக்க பண்டாரநாயக்க மற்றும் லக்ஷ்மன் செனவிரத்ன ஆகியோர் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்குவதில்லை எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவுக்கும் அமைச்சுப் பதவியை வழங்காதிருக்க ஜனாதிபதி தீர்மானித்திருப்பதாகவும் அறிய வருகிறது.

0 Comments