Ticker

6/recent/ticker-posts

சிறையில் இருக்கும் புலிகளை விடுதலை செய்யமாட்டேன்- சிறினே அறிவிப்பு

முன்னாள் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார்.

போர்க்குற்றங்கள் செய்ததாக 54 இராணுவ அதிகாரிகள் மீது ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சில் பொய்க் குற்றஞ்சாட்டியுள்ளதாகவும் ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.

முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் 110 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு  இரண்டு ஐ.நா விசேட தூதுவர்கள் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இவர்களில் 10 பேர் எல்.ரீ.ரீ.ஈ யின் கொடூரமான யுத்தக் குற்றங்கள் செய்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இவர்கள் 26 இராணுவ வீரர்களைக் கொன்றதாகவும், விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தி 48 பேரை கொன்றதாகவும் இவர்கள் மீது  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments