ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஆளும் தரப்பில் அமர்ந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான இந்திக பண்டாரநாயக்க, லக்ஷ்மன் செனவிரத்ன, விஜித் விஜயமுனி சொய்சா, பியசேன கமகே ஆகியோர் ஆளும் தரப்பில் அமர்ந்துகொண்டனர்.
பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை எதிர்க்கட்சித் தலைவராகவும், மஹிந்த அமரவீரவை எதிர்கட்சியின் பிரதம கொறடாவாகவும் நியமிப்பதற்கு தீர்மானித்ததாக சபாநாயகர் தெரிவித்தார்.

0 Comments