முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரை பகுதியில் இரண்டு புலிக்கொடிகள் கரை ஒதுங்கியுள்ளன. இன்று 18.12.18 காலை இந்த புலிக்கொடிகள் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தொிவித்தனா்.
செல்வபுரம் கடற்கரைப்பகுதியில் காலணிகள், உடைககள், இரும்புகள், உரபைகள்,என பல பொருட்கள் கரை ஒதுங்கி வருவதுடன் கடல் அட்டைகளும் கரை ஒதுங்கி வருகின்றன.
இன்னிலையில் பிரதேச மீனவர்கள் கடல் அட்டைகளை பொறுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு அடி நீளம் கொண்ட புலிக்கொடி ஒன்றும் நான்கு அடி நீளம் கொண்ட புலிக்கொடி ஒன்றும் கரை ஒதுங்கியுள்ளன.
இரண்டு கொடிகளும் புதிய கொடிகளாகவே கணப்பட்டுள்ளன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு பொலீசாரும், இராணுவ புலனாய்வு பிரிவினரும் அந்த கொடிகளை எடுத்து சென்றுள்ளனர்.

0 Comments