Ticker

6/recent/ticker-posts

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஏழு மாணவர்களுக்கும் தலா ஐம்பத்து இரண்டாயிரம் (52,000 ) தண்டம்!

கிரலாகல தூபியில் ஏறி புகைப்படம் எடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த  தென்கிழக்கு பல்கலைக்கழக ஏழு மாணவா்களும் இன்று கெபித்திகொல்லாவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குறித்த மாணவர்களுக்கு தலா ஐம்பத்து இரண்டாயிரம் ரூபாய் தண்டம் விதித்து இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 பொலிஸாரினால் மாணவா்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை  நீதிமன்றில் மாணவா்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் பின்னா் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

மாணவர்கள் ஒவ்வொருவருக்கும்  மூன்று குற்றச்சாட்டுகளுக்குமாக தலா  ஆயிரம், ஆயிரம் மற்றும் ஐம்பதாயிரம் என ஒவ்வொருவருக்கும்
52, 000 தண்டம் விதிக்கப்பட்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

1940ம் ஆண்டின் 09ம் இலக்க தொல் பொருட்கள் கட்டளைச்சட்டத்தின் (1998ம் ஆண்டின் 24ம் இலக்க சட்டத்தாலும், 2005ம் ஆண்டின் 12ம் இலக்க சட்டத்தாலும் திருத்தப்பட்டது) பிரிவு-31(B) யின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றத்தினைப் புரிந்துள்ளதாக பொலிஸார் இவர்கள் மீது குற்றம் சுமத்தியிருந்தனர்.
இன்று  சட்டத்தரணி  ஷிராஸ் நூர்தீன் மாணவர்கள் சார்பில் ஆஜராகினார். அவரோடு சட்டத்தரணிகளான  ருஷ்தி ஹபீப், சப்ராஸ் ஹம்சா ஆகியோரும் ஆஜராகி உள்ளனர்.

Post a Comment

0 Comments