Ticker

6/recent/ticker-posts

மாகந்துரே மதுஷ் மற்றும் டீ. மஞ்சுவின் உதவியாளர்கள் மூவர் கைது

பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷ் மற்றும் டீ. மஞ்சுவின் உதவியாளர்கள் மூவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வத்தளையில் இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வசமிருந்த ஐஸ் உள்ளிட்ட 20 போதைவில்லைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
26, 29, 32 வயதுடைய மூவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை விசாரணைகளின் பொருட்டு ​போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் சர்வதேச வலையமைப்புடன் தொடர்புள்ளதாக சந்தேகத்தின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று பங்களாதேஷிற்கு செல்லவுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் கடந்த வருடத்தில் கைப்பற்றப்பட்ட அதிகூடிய ஹெரோயின் விநியோகத்துடன் அவர்கள் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பங்களாதேஷ் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.newsfirst.lk

Post a Comment

0 Comments