உரிய வீசா அனுமதிப்பத்திரங்கள் இன்றி, சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடிவரவு - குடியகல்வு விதிமுறைகளை மீறி, இலங்கையில் தங்கியிருந்த குறித்த சந்தேக நபர்கள், வெவ்வெறு பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (05) இரவு 11.30 மணியளவில் ஹிக்கடுவை, மில்லகொடவத்த பிரதேசத்தில் வைத்து, சுவிஸ்லாந்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, திங்கட்கிழமை (06) இரவு 10.45 மணியளவில் தாய்லாந்து நாட்டுப் பெண் ஒருவரும், இரவு 11.55 மணியளவில் கல்கிஸ்ஸை நகரிலுள்ள மற்றுமொரு சுற்றுலா ஹோட்டலொன்றில் வைத்து, கட்டார் நாட்டவர் ஒருவரும் ஹோட்டலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், (06) இரவு 11.30 மணியளவில் தெஹிவளை பிரதேசத்தில் நைஜீரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள், காலி மற்றும் கல்கிஸ்ஸை நீதிமன்றங்களில் பொலிஸாரினால் (06) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
0 Comments