உள்ளூர் விதிமுறைகள் மற்றும் இஸ்லாமிய போதனைகளை மீறி, மறைந்த பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத்தின் சார்பாக உம்ரா செய்கிறேன் என்று புனித மக்கா ஹரம் ஷரீபில் பதாகையை தூக்கிய யெமன் நாட்டு பிரஜை ஒருவரை சவுதி அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அனடோலு ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த யெமன் நாட்டு பிரஜை, மக்காவின் புனித ஹரம் ஷரீப் மஸ்ஜிதில் நின்றுகொண்டு, ராணி இரண்டாம் எலிசபெத்தின் ஆன்மா சாந்தியடைய உம்ரா செய்வதாகவும், அவருக்கு சொர்க்கத்தை வழங்க இறைவனை வேண்டுவதாகவும் ஒரு பதாகையை வைத்திருந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.
சவூதி பொதுப் பாதுகாப்புப் பிரிவு மற்றும் புனித ஹரம் ஷரீபின் பாதுகாப்பு சிறப்புப் படை, உம்ரா விதிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களை மீறியதற்காக, அந்த யெமன் நாட்டு நபரைக் கைது செய்துள்ளது.
0 Comments