Ticker

6/recent/ticker-posts

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வட கொரியா ஏவுகணை பரிசோதனை

வட கொரியா இன்றுஞாயிற்றுக்கிழமை தனது நாட்டின் கிழக்கு கடற்கரையில் இரண்டு குறுகிய தூர பால்ஸ்டிக் ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது.

உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் அச்சுறுத்தலுக்கு  மத்தியில் இடம்பெற்ற இந்த பரிசோதனையை தென் கொரியா "பொருத்தமற்ற"  நடவடிக்கை என்று விமர்சித்துள்ளது.

வடகொரியாவின் கடலோர நகரான வொன்சன் பகுதியில் இருந்து இந்த  இரண்டு "குறுகிய தூர ஏவுகணைகள்" ஏவப்பட்டுள்ளன.

இந்த ஏவுகணைகள் 30 கிலோமீட்டர்  உயரத்தில் 230 கிலோமீட்டர்  வேகத்தில் செலுத்தப்பட்டதாக தென் கொரிய இராணுவ கூட்டுத் தலைமையகம் தெரிவித்ததாக ரொய்டர் இணையதளம் செய்தி  வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments