Ticker

6/recent/ticker-posts

1140 குடும்பங்களுக்கு 11 லட்சத்து 40 ஆயிரம் ரூபா செலவில் உலர் உணவு பொதிகள் - பத்தனை வர்த்தகரின் முன்மாதரியான செயல்

(க.கிஷாந்தன்)

பத்தனை பகுதியிலுள்ள  வர்த்தகர்களான எச்.எல் தினுக மற்றும் எச்.எல். மனோஜ் பிரசன்ன, ஆகியோர் அப்பகுதியிலுள்ள சுமார் ஆயிரத்து 140 தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொதிகளை வழங்கியுள்ளார்.

'கொரோனா' வைரஸை கட்டுப்படுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் முழு நாட்டையும் முடங்கியுள்ளது.

இதனால் பெருந்தோட்டப்பகுதிகில் உள்ள பலர் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள் வருமானத்தை நம்பியிருந்தவர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அத்தகைய நபர்களுக்கு நேசக்கரம் நீட்டும் நோக்கிலேயே கொட்டகலை, மேபீல்ட், பத்தனை கிறேக்கிலி தோட்டம் உட்பட மேலும் சில தோட்டங்களில் வாழ்பவர்களை மையப்படுத்தி மொத்தமாக 11 லட்சத்து 40 ஆயிரம் ரூபா செலவில், ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மனிதநேய செயற்பாட்டில் ஈடுபட்ட வர்த்தகர்களான எச்.எல் தினுக மற்றும் எச்.எல். மனோஜ் பிரசன்ன ஆகியோருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், பயன்பெற்றவர்கள் நன்றிகளை தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments