Ticker

6/recent/ticker-posts

நடுக்கடலில் கைப்பற்றப்பட்ட 12,500 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் !

இலங்கையின் தெற்கு நடுக்கடலில் இடம்பெற்ற தேடுதல் ஒன்றின் போது இலங்கை கடற்படை  12,500 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள்களை கைப்பற்றியுள்ளது. 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள் இன்று திக்ஓவிட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சோதனையின் போது 500 கிலோகிராம் கோகோயின் மற்றும் 500 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. 

கப்பல் ஆழ்கடல் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தபோது, ​​இலங்கையின் தென் கடற்கரையிலிருந்து 463 கடல் மைல் தொலைவில் வெளிநாட்டுக் கொடியைக் கொண்ட கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்தக் கப்பலில் குறித்த போதைப்பொருள்கள் இருந்ததாகவும்  இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

பரிசோதனையில், ஐஸ்  மற்றும் கோகோயின் உட்பட 200 பெக்கட் பாபுல் மற்றும் 100 கிராம் அடையாளம் தெரியாத போதைப்பொருளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments