கோவிட் 19 தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பொது மற்றும் தனியார் துறைகளின் பணிகளை இந்த மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் பல கட்டங்களில் தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தமது தொழில் இடங்களுக்கு ஊழியர்கள் வருவதற்கு வசதியாக போக்குவரத்து சேவைகளை மீண்டும் தொடங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, 5000 இ.போ.ச பஸ்கள் மற்றும் 400 ரயில்கள் வழக்கம் போல் பொது போக்குவரத்துக்காக ஏற்பாடு செய்யப்படும். பாதுகாப்புப் படையினர் மற்றும் சுகாதார அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதலின் கீழ் அனைத்து பொது போக்குவரத்தும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

0 Comments