கொரோனா - கோவிட் -19 தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 150,000 ஐ எட்டியுள்ளது.
அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, புதிய கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள மொத்த இறப்புகளின் எண்ணிக்கை உலகளவில் 153,177 ஆகும்.
உலகளவில், கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 2.2 மில்லியனை எட்டியுள்ளது.
இந்தத் தரவுகள் இதைவிட அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கிடைக்கக்கூடிய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் மற்றும் ஊடக அறிக்கைகளைப் பயன்படுத்தி ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் மேற்கண்ட தரவை வெளியிட்டுள்ளது.
கோவிட் -19 ஐ சோதனை செய்யும் முறைகள் வெவ்வேறு நாடுகளில் வேறுபட்டிருப்பதால் இந்தத் தகவல்கள் தொடர்ந்து மாறும் என்று கூறப்படுகிறது.

0 Comments