நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ' சௌபாக்கியா வீட்டுத் தோட்டம் ' மாதிரி வீட்டுத் தோட்ட வேலைத்திட்டம் -2020 நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது .
ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் பயனாளிகள் உள்ளுர் விவசாய அமைப்பின் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பயிர் விதைகள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
சவளக்கடை விவசாய விரிவாக்கல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை(21) முற்பகல் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.சசிகரன் ,விவசாய போதனாசிரியர் எம்.எஸ்.எம்.ஜெனித்கான்,தொழில்நுட்ப உத்தியோகத்தர்களாகியோர்கள் வீ.சியாமளா,ஆர்.ரேனுகா,ரீ.தனுரேகா கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான பயிர் விதைகள் அடங்கிய பொதிகளை வழங்கி வைத்தனர்.
0 Comments