ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் (UAE) , உத்தியோகபூர்வ அறிக்கைகளுக்கு முரணான வகையில் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களைப் பரப்பினால் 20,000 திர்ஹாம்( 5500 அமெரிக்க டொலர்கள்) வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த தகவலை அந்த நாட்டின் செய்தி நிறுவனம் WAM இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.
வளைகுடாவில் கொரோனா COVID-19 பரவல் தொடர்பான தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 37 மரணங்களும், 6,300 நோய்த்தொற்றுகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

0 Comments