பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகள் மூன்று கட்டங்களாக தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவா் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார்.
அதன்படி, அனைத்து பல்கலைக்கழக மாணவர்களினதும் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் மே 18 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மே 4 ஆம் திகதி பணிகளைத் தொடங்குவார்கள் என்றும் , இறுதி ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மே 11 ஆம் திகதி தொடங்கும் என்றும் அவா் கூறினார்.

0 Comments