Ticker

6/recent/ticker-posts

பள்ளிவாசல்களில் தொழுகைக்கான கட்டுப்பாடுகளை நீக்கியது பாகிஸ்தான் அரசு !



பள்ளிவாசல்களில் தொழுகைக்கான கட்டுப்பாடுகளை பாகிஸ்தான்  அரசு நீக்கியுள்ளது. ஆனால் நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் பள்ளிவாசல்களில் அவை கட்டாயம் கடைப்பிடிக்கப்படல் வேண்டும்  என்றும் பாகிஸ்தான் அரசு மேலும் அறிவித்துள்ளது.

உலகின் இரண்டாவது அதிக முஸ்லிம் மக்கள் தொகையை கொண்ட நாடான பாகிஸ்தான், ஒரு மாதத்திற்கு முன்னர் பள்ளிவாசல்களில் தொழுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.  பள்ளிவாசல்களில் மூன்று முதல் ஐந்து பேர் மட்டுமே தொழுகைகளுக்கு அனுமதிக்கபட்டிருந்தனர்.

இன்று பாகிஸ்தானிய ஜனாதிபதி ஆரிஃப் அல்வி மற்றும் இஸ்லாமிய மார்க்க தலைவர்களுக்கிடையேயான சந்திப்பில்  மேற்படி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் மூலம் எதிர்வரும் ரமழான் மாதத்தை முன்னிட்டு  உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன்  தொழுகை நடாத்த  பள்ளிவாசல்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

தொழுகைக்கு வருபவர்கள்  முகக்கவசம்  அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.  தொழுகையில்  ஈடுபடுபவர்கள் தோளோடு தோள் சேர்ந்து  நிற்கும்  வழக்கமான நடைமுறைக்கு பதிலாக ஒருவருக்கொருவர் 6 அடி (2 மீட்டர்) தூரத்தை பராமரிக்க வேண்டும் என்றும் பள்ளிவாசல் நிர்வாகங்கள் வளாகத்தை தவறாமல் கிருமி நீக்கம்  செய்ய வேண்டும் என்றும் அறிவுருத்தப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments