Ticker

6/recent/ticker-posts

தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளவர்களின் தலைக்கு எண்ணெய் தடவ முயன்ற பொலிஸ் காவலர் கைது!



வெலிகந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளவர்களின் தலைக்கு ஒரு வகை எண்ணெய்யைத்  தடவ முயன்ற பொலிஸ் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (06) காலை 9:30 மணியளவில் வெலிகந்தவில் உள்ள கோவிட் 19 தனிமைப்படுத்தல் மையத்திற்குள் நுழைந்த போலீஸ் காவலர் ஒருவர்  அனுமதியின்றி உள்நுழைந்து இவ்வாறு எண்ணெய் தடவ முயன்ற போது குறித்த  தனிமைப்படுத்தல் நிலைய அதிகாரிகளின் தலையீட்டால் தடுக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் காவலர்  பசரை  பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் என்றும்  மோட்டார் சைக்கிளில் வெலிகந்த பகுதிக்கு வந்திருக்கிறார் என்றும் அறிய வருகிறது.

குறித்த பொலிஸ்  காவலர் இராணுவத்தின் உதவியோடு புனானை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.

Post a Comment

0 Comments