Ticker

6/recent/ticker-posts

சமூக ஊடகங்களில் பொய்களை பரப்பியதாக ஒன்பது பேர் கைது !



கொரோனா வைரஸை தொற்றுக்கு  எதிரான  மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை சீர்குலைக்கும்  நோக்கில் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட தவறான பிரச்சாரங்கள் தொடர்பாக ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டில்  எட்டு ஆண்களும் ஒரு பெண்ணும்  பொலிஸ் குற்றத் தடுப்பு  பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பண்டாரகம, கண்டி, தெஹிவலை, மஹரகம, நுகேகொடை, காலி, வாத்துவ, அங்கொடை மற்றும் பொல்கஹவெல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

சந்தேக நபர்கள் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments